வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் தயாரிக்கும் முறை! | Method of making waste decomposer solution!

வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் தயாரிக்கும் முறை! 

Method of making waste decomposer solution!

No1 Vivasayi,

No1 Vivasayi

வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் தயாரிக்கும் முறை! 

💐 வேளாண் கழிவுகளான மாட்டுச்சாணம், தீவன கழிவுகள், தோட்டக்கழிவுகள், ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியிடப்படும் கழிவுகள் போன்றவை பல இடங்களில் வீணாக்கப்படுகின்றன.

💐 ஆனால் இவைகளை கொண்டு நம் முன்னோர்கள் பல உரங்களை தயாரித்து, இயற்கை முறையில் விவசாயம் செய்து வந்தனர். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் அந்த கழிவுகளை மட்க வைத்து வேஸ்ட் டீகம்போஸர் தயாரித்து பயன்படுத்தி வந்தனர். அதை எவ்வாறு விவசாயத்திற்கு உரமாக பயன்படுத்தலாம் என இங்கு காண்போம்.


வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் :

தேவையான பொருட்கள் :

💐 வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் தயாரிக்க 2 கிலோ வெல்லம், 1 பாட்டில் வேஸ்ட் டீகம்போஸர், 200 லிட்டர் தண்ணீர், 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 டிரம் போன்றவை தேவைப்படும்.


தயாரிக்கும் முறை :

🌿 முதலில் 200 லிட்டர் டிரம்மை எடுத்து அதில் 200 லிட்டர் நீரை ஊற்றிக்கொள்ள வேண்டும்.

🌿 பிறகு அதனுடன் 2 கிலோ வெல்லத்தை போட்டு நன்கு கலக்கி, திட நிலையிலிருக்கும் வேஸ்ட் டீகம்போஸரை ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.

🌿 அதன் பின் தினமும் 2 முறை மரக்குச்சியினால் அந்த கரைசலை 7 நாட்களுக்கு கலக்கி விட வேண்டும்.

🌿 அந்த கரைசலை நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும்.


பயன்படுத்தும் அளவு :

🍂 இதன் மூலம் 200 லிட்டர் வேஸ்ட் டீகம்போஸர் கரைசலை தயாரிக்க முடியும்.

🍂 தேவையான அளவிற்கு இந்த கரைசலை பயிர்களுக்கு தௌpப்பான்களை கொண்டு தௌpக்கலாம்.

🍂 இந்த கரைசலை 1 மாதத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

🍂 இந்த கரைசலை பாசன நீரில் கலந்து விடுவது மற்றும் இலைவழி மூலம் தௌpப்பது போன்ற முறைகளிலும் பயிர்களுக்கு அளிக்கலாம்.


நன்மைகள் :

🌱 நெல், காய்கறிகள், மரப்பயிர்கள், பழப்பயிர்கள் என அனைத்து விதமான பயிர்களுக்கும் இந்த கரைசலினை பயன்படுத்தலாம்.

🌱 மண்ணில் உள்ள நுண்ணுயிர்களைப் பெருக்கி மண்ணை வளமாக மாற்ற இந்த கரைசல் உதவுகிறது.

🌱 வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் போன்ற அனைத்திற்கும் இதை உரமாக பயன்படுத்தலாம்.

🌱 இந்த கரைசலை பயன்படுத்துவதால் செடிகளில் பூக்கள் உதிர்வதையும், நோய்கள் தாக்குவதையும் தவிர்க்கலாம்.



Comments

Popular posts from this blog

விவசாய கேள்வி - பதில்கள் | Agriculture Question - Answers

ரம்புட்டான் பழம் சாகுபடி | Cultivation of rambutan fruit