விவசாய கேள்வி - பதில்கள் | Agriculture Question - Answers
விவசாய கேள்வி - பதில்கள்
Agriculture Question - Answers
No1 Vivasayi,
விவசாய கேள்வி பதில்கள்.!
1. D.M.V-14 ரக நிலக்கடலையின் வளரியல்பு என்ன?
★ இது 95-100 நாட்கள் வயது கொண்ட பயிராகும். இந்த ரகம் வி.ஆர்.ஐ (ஜிஎன்) 6, ஆர் 2001-2 ஆகிய நிலக்கடலை ரகங்களிலிருந்து உருவாக்கப்பட்டது ஆகும்.
★ இந்த ரக நிலக்கடலை அனைத்து பருவங்களிலும் பயிரிட ஏற்றது ஆகும். இதன் விதைகள் பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். இதன் உற்பத்தி திறன் 70.6 சதவிகிதம், எண்ணெய்ச் சத்து 48 சதவிகிதம் இருக்கும்.
★ புரோட்டீனியா, இலைப்பேன் மற்றும் இலைச்சுருள் பு+ச்சி ஆகியவற்றின் தாக்குதல் குறைவு. இலைப்புள்ளி மற்றும் துரு நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.
★ காளான் படுக்கை அமைக்க தேவைப்படும் வைக்கோல் மூலப்பொருளை எவ்வாறு தயார் செய்யலாம்?
★ முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுடைய சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
★ அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். அதன் பிறகு தண்ணீரை வடிகட்ட வேண்டும்.
★ வைக்கோலை எடுத்து கைகளால் பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். வைக்கோலில் 65 சதவீதம் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. பூசணிச் செடியில் வரும் சாம்பல் நோயை எப்படிக் கட்டுப்படுத்தலாம்?
★ முதிர் நிலையை அடைந்து கொண்டிருக்கும் பூசணி செடிகளை இந்நோய் தாக்கும். முதிர் இலைகளில் ஒழுங்கற்ற சிறிய புள்ளிகள் தோன்றும்.
★ இந்த சம்பல் நோயைக் கட்டுப்படுத்த பத்து லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி வேப்பெண்ணெய், சிறிதளவு காதி சோப்பு கரைசல் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
3. கறிவேப்பிலை நாற்றை எவ்வாறு உற்பத்தி செய்யலாம்?
★ கறிவேப்பிலை விதைகளை பறித்த 3 முதல் 4 நாட்களில் விதைக்கவேண்டும். விதைகளை பாலித்தீன் பைகளில் செம்மண் நிரப்பி விதைக்கலாம். ஒரு வயதுடைய நாற்றுகளை நடவுக்கு பயன்படுத்தலாம்.
ஆட்டு எரு நிலத்தை எவ்வாறு வளப்படுத்துகின்றது? ஆட்டு எருவின் இயல்பு என்ன?
🐐 ஆட்டு எருவில் தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து உள்ளது. ஒரு ஆடு ஆண்டுக்கு 500 முதல் 750 கிலோ வரை எருவை அளிக்கிறது. ஒரு எக்டர் நிலத்தை எல்லா சத்துக்களையும் கொண்டு வளப்படுத்த 240 ஆடுகளை வளர்த்தால் போதுமானது.
🐐 ஆட்டு எரு மண் வளத்தை பெருக்குகிறது. ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப்பொருட்களின் அளவு அதிகரித்து ஈரப்பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாக இருக்கும்.
இது போன்ற உங்களின் அனைத்து விதமான விவசாயம் சார்ந்த சந்தேகங்களுக்கும் தீர்வு பெற, உங்களது கேள்விகளை நமது நித்ரா விவசாய செயலியில் உள்ள கேள்வி - பதில்கள் பகுதியில் பதிவிட்டால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் பதில் அளிக்கப்படும்.
Comments
Post a Comment