Posts

Showing posts from October, 2024

ரம்புட்டான் பழம் சாகுபடி | Cultivation of rambutan fruit

Image
ரம்புட்டான் பழம் சாகுபடி!  Cultivation of rambutan fruit! No1 Vivasayi, ரம்புட்டான் பழம் சாகுபடி!  🍊 ரம்புட்டான் சப்பின்டேசிக என்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர உயரமுள்ள ஒரு பூக்கும் பழமரத்தாவரமாகும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் ரம்புட்டான் என பெயர் பெற்றது. 🍊 ரம்புட்டான் ஒரு குளுமையான பழம். இப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். இப்பழத்தில் மூன்று பாகங்கள் உள்ளன. அவை : பழத்தின் மேல்தோல் பகுதி, பழத்தின் சதைப் பகுதி மற்றும் விதைப்பகுதி. இதில் பழத்தின் மேல்தோல் பகுதி மற்றும் விதைப்பகுதி மிகவும் கசப்பாக இருக்கும். எனவே சதை பகுதி மட்டுமே உண்பதற்கு ஏற்ற பழமாக உள்ளது. விதை அல்லது நாற்றுகள் : 🍑 ரம்புட்டானை விதை மற்றும் ஒட்டுக்கன்று முறைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். மேலும் ரம்புட்டான் விதைகள் என்பது கடினமான தோல் என்பதால் அதிக காலத்திற்கு சேமித்து வைக்க முடியாது. எனவே விதைகள் சேகரிக்கப்பட்டவுடன் போலிபெக் என்கின்ற விதைப்பையில் நடப்படுகின்றன.  நடவு செய்யும் முறை : 🍑 ரம்புட்டான் கன்றுகள் நடுவதற்கு 60 ஒ 60 அகலமும், 10 மீட்டர் ஆழமுள்ள குழ...

வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் தயாரிக்கும் முறை! | Method of making waste decomposer solution!

Image
வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் தயாரிக்கும் முறை!  Method of making waste decomposer solution! No1 Vivasayi, வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் தயாரிக்கும் முறை!  💐 வேளாண் கழிவுகளான மாட்டுச்சாணம், தீவன கழிவுகள், தோட்டக்கழிவுகள், ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியிடப்படும் கழிவுகள் போன்றவை பல இடங்களில் வீணாக்கப்படுகின்றன. 💐 ஆனால் இவைகளை கொண்டு நம் முன்னோர்கள் பல உரங்களை தயாரித்து, இயற்கை முறையில் விவசாயம் செய்து வந்தனர். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் அந்த கழிவுகளை மட்க வைத்து வேஸ்ட் டீகம்போஸர் தயாரித்து பயன்படுத்தி வந்தனர். அதை எவ்வாறு விவசாயத்திற்கு உரமாக பயன்படுத்தலாம் என இங்கு காண்போம். வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் : தேவையான பொருட்கள் : 💐 வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் தயாரிக்க 2 கிலோ வெல்லம், 1 பாட்டில் வேஸ்ட் டீகம்போஸர், 200 லிட்டர் தண்ணீர், 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 டிரம் போன்றவை தேவைப்படும். தயாரிக்கும் முறை : 🌿 முதலில் 200 லிட்டர் டிரம்மை எடுத்து அதில் 200 லிட்டர் நீரை ஊற்றிக்கொள்ள வேண்டும். 🌿 பிறகு அதனுடன் 2 கிலோ வெல்லத்தை போட்டு நன்கு கலக்கி, திட நிலையிலிருக்கும் வேஸ்ட் டீகம்ப...

விவசாய கேள்வி - பதில்கள் | Agriculture Question - Answers

Image
விவசாய கேள்வி - பதில்கள் Agriculture Question - Answers No1 Vivasayi, விவசாய கேள்வி  பதில்கள்.! 1. D.M.V-14  ரக நிலக்கடலையின் வளரியல்பு என்ன?  ★  இது 95-100 நாட்கள் வயது கொண்ட பயிராகும். இந்த ரகம் வி.ஆர்.ஐ (ஜிஎன்) 6, ஆர் 2001-2 ஆகிய நிலக்கடலை ரகங்களிலிருந்து உருவாக்கப்பட்டது ஆகும். ★  இந்த ரக நிலக்கடலை அனைத்து பருவங்களிலும் பயிரிட ஏற்றது ஆகும். இதன் விதைகள் பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். இதன் உற்பத்தி திறன் 70.6 சதவிகிதம், எண்ணெய்ச் சத்து 48 சதவிகிதம் இருக்கும். ★ புரோட்டீனியா, இலைப்பேன் மற்றும் இலைச்சுருள் பு+ச்சி ஆகியவற்றின் தாக்குதல் குறைவு. இலைப்புள்ளி மற்றும் துரு நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. ★ காளான் படுக்கை அமைக்க தேவைப்படும் வைக்கோல் மூலப்பொருளை எவ்வாறு தயார் செய்யலாம்? ★  முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுடைய சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். ★ அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். அதன் பிறகு தண்ணீரை வடிகட்ட வேண்டும்.  ★  வைக்கோலை எடுத்து ...