ரம்புட்டான் பழம் சாகுபடி | Cultivation of rambutan fruit

ரம்புட்டான் பழம் சாகுபடி! Cultivation of rambutan fruit! No1 Vivasayi, ரம்புட்டான் பழம் சாகுபடி! 🍊 ரம்புட்டான் சப்பின்டேசிக என்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர உயரமுள்ள ஒரு பூக்கும் பழமரத்தாவரமாகும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் ரம்புட்டான் என பெயர் பெற்றது. 🍊 ரம்புட்டான் ஒரு குளுமையான பழம். இப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். இப்பழத்தில் மூன்று பாகங்கள் உள்ளன. அவை : பழத்தின் மேல்தோல் பகுதி, பழத்தின் சதைப் பகுதி மற்றும் விதைப்பகுதி. இதில் பழத்தின் மேல்தோல் பகுதி மற்றும் விதைப்பகுதி மிகவும் கசப்பாக இருக்கும். எனவே சதை பகுதி மட்டுமே உண்பதற்கு ஏற்ற பழமாக உள்ளது. விதை அல்லது நாற்றுகள் : 🍑 ரம்புட்டானை விதை மற்றும் ஒட்டுக்கன்று முறைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். மேலும் ரம்புட்டான் விதைகள் என்பது கடினமான தோல் என்பதால் அதிக காலத்திற்கு சேமித்து வைக்க முடியாது. எனவே விதைகள் சேகரிக்கப்பட்டவுடன் போலிபெக் என்கின்ற விதைப்பையில் நடப்படுகின்றன. நடவு செய்யும் முறை : 🍑 ரம்புட்டான் கன்றுகள் நடுவதற்கு 60 ஒ 60 அகலமும், 10 மீட்டர் ஆழமுள்ள குழ...